இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு ஓமானை அடைந்துள்ளதாக கண்டறியப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image: Oman
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு ஓமானை அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸின் மரபணு மாற்றம் ஏற்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு ஓமானை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கள மருத்துவமனை(Field Hospital)இயக்குநர் டாக்டர்.நபீல் முகமது அல் லாவதி இதை தெரிவித்தார். இருப்பினும், இது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது எனவும்,அதன் பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி நாம் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுதான் என்றும், அவர் கூறியதாக ஓமான் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அதுபோல் ஓமானில் உள்ள கள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 50 வயதிற்குட்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓமான் டி.வி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கள மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க முடிந்த மொத்த திறனில் 80 சதவீதம் நிரம்பி விட்டதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஐ.சி.யுவில் வைரஸ் பாதிப்பு முலம் கவலைக்கிடமாக சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் குறைந்துள்ளது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.