குவைத் துறைமுகத்தில் இந்தியாவின் INS கொல்கத்தா போர் கப்பல் வந்து சேர்ந்தது;மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்வதற்காக வந்துள்ளது
குவைத் துறைமுகத்தில் இந்தியாவின் INS கொல்கத்தா போர் கப்பல் வந்து சேர்ந்தது
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,குவைத் அரசு சார்பில் அவசரகால உதவியாக வழங்கப்பட்ட திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் மருத்துவ பொருட்களை எடுத்துச்செல்ல இந்தியாவின் INS கொல்கத்தா போர் கப்பல் Shuwaikh துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்று இரவு சுமார் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்து பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய 40 டன் அளவுக்கு பொருட்களுடன் குவைத் விமானப்படை டெல்லியை சென்றடைந்த நிலையில்,திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் மருத்துவ பொருட்களை எடுத்துச்செல்ல இந்தியாவின் INS கப்பல் குவைத்திற்கு வந்துள்ளது.
குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ்,குவைத் சுகாதரத்துறை செய்தி தொடர்பாளர் மற்றும் அதாகாரிகள் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்த INS கொல்கத்தா போர் கப்பல் குவைத் அரசால் வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ கிரையோஜெனிக் டேங்குகள் திரவ மருத்துவ ஆக்ஸிஜனின்(40 மெட்ரிக்),500 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் 4 ஆக்ஸிஜன் செறிவூட்டல் உபகரணங்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்ல வந்துள்ளதாக தூதரகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.