இந்திய பயணிகள் இலங்கை செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்து சற்றுமுன் உத்தரவு வெளியிட்டுள்ளது
இந்திய பயணிகள் இலங்கை செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது
இந்தியாவில் கொரோனா மரபணு மாற்ற வைரஸ் பரவல் தீவிரமாக அதிகரித்து வருகின்ற நிலையில் பயணிகள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா,மலேசியா,சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் இலங்கை சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சிவில் ஏவியேஷன் ஆணையம்(சிஏஏ) பிறப்பித்த உத்தரவில் இந்தியாவில் இருந்து பயணிகள் தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.இது தொடர்பான தகவல் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் தடை நடைமுறையில் இருக்கும்.
முன்னதாக, இலங்கை இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்திருந்தது.இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி பயணம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டினர் பல இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 4,12,262 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,980 பேர் உயிரிழந்தனர் என்று இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கணக்கில் வராத மேலும் 100 கணக்கான மக்கள் கொரோனா காரணமாக மரணமடைந்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 23,310 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடைய கேரளாவில் மே-8 முதல் 16-ஆம் வரையில் முழுமையான ஊரடங்கு உத்தரவு சற்றுமுன் பிறப்பித்துள்ளது.