குவைத் விமான நிலையம் மற்றும் பிற எல்லை வாயில்கள் ஒரு மாதத்திற்குள் முழுமையாக திறக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளன
Image : Kuwait Airport
குவைத் விமான நிலையம் மற்றும் பிற எல்லை வாயில்கள் ஒரு மாதத்திற்குள் முழுமையாக திறக்கப்படலாம்
குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் பிற எல்லை வாயில்கள் ஒரு மாதத்திற்குள் முழுமையாக திறக்கப்படும் என்று உள்ளூர் அரபு தினசரி நாளிதழ் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் நாட்டில் உள்ள குடியிருப்பாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும்.கொரோன பரவல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்துவது நாடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தயாராகி வருகிறது என்பதை காட்டுகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டில் விதிக்கப்பட்ட பகுதி ஊரடங்கு உத்தரவு இந்த மாதம்-14 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டது. ஜி.ஜி.சி நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடன் அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மேற்குறிப்பிட்ட தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே குவைத் மற்றும் அமீரகம் இடையேயான விமான பயண சேவைகள் மீண்டும் தொடங்க இருநாடுகளும் தயாராகி வருகிறது எனவும், இரு நாடுகளும் இது தொடர்பாக பேச்சுவார்த்தையினை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் மேற்கொள் காட்டி செய்தித்தாள் செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி கோவிட் தடுப்பூசி போட்டவராகவோ அல்லது 72 மணிநேரத்திற்குள் செல்லுபடியாகும் கோவிட் பரிசோதனை பி.சி.ஆர் சான்றிதழை வழங்கி இரு நாடுகளிலிருந்தும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இரு நாடுகளுக்கும் பயணிக்கலாம். தடுப்பூசி எடுத்த விபரம் மற்றும் பி.சி.ஆர் சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் அந்தந்த நாடுகளில் பயணம் தொடர்பான செயலியில் பதிவு செய்யப்பட வேண்டும். குவைத் தற்போது வரையில அமீரகத்திலிருந்து நேரடி விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.