BREAKING NEWS
latest

Tuesday, May 18, 2021

குவைத்தில் பிறந்து வளர்ந்த இந்திய பெண் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்

குவைத்தில் பிறந்து வளர்ந்த இந்திய பெண் அட்லினோ காஸ்டெலினோ மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Image: அட்லினோ காஸ்டெலினோ

குவைத்தில் பிறந்து வளர்ந்த இந்திய பெண் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்

69-வது ஆண்டுக்கான யுனிவர்ஸ் அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் மிகுந்த பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நேற்று நடைபெற்றது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த  26-வயதான ஆண்ட்ரியா மெஸா பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் குவைத்தில் பிறந்து வளர்ந்த இந்தியரான அட்லினோ காஸ்டெலினோ நான்காவது இடத்தைப் பிடித்தார். 22-வயதான அவர் கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்தவர். "Miss Diva 2020" பட்டத்தை வென்று மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

அட்லினோ மே-21,1998 அன்று குவைத் சிட்டி பிறந்தார். அல்போன்ஸ் மற்றும் மீரா தம்பதியினரின் மகள் அவர்,குவைத் இந்தியன் Central பள்ளி மாணவி ஆவார். மேலும் தனது 15-வயதில் உயர்நிலைப் பள்ளி படிக்க மும்பைக்குச் சென்றார், பின்னர் வில்சன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சமூகப் பிரச்சினைகளிலும் தன்னை ஈடுபட்டுத்தி கொண்டுள்ள அவர்,கோவிட்-19 ஊரடங்கின் போது, தேவைப்படுபவர்களுக்கு சமுக சேவை அமைப்புடன் இணைந்து நிறைய தன்னார்வல சேவைகளைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comments to குவைத்தில் பிறந்து வளர்ந்த இந்திய பெண் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்

« PREV
NEXT »