குவைத் உள்ள நகைக்கடை மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு புதிய வர்த்தக விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது
குவைத்தில் நகைக்கடைகளுக்கு புதிய வர்த்தக விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது
குவைத் உள்ள நகைக்கடை மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் மற்றும் நகைகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையின் அமைச்சர் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தங்கம் நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் அதை விற்பனைக்காக அறிமுகம்(காண்பிக்கும் போது) செய்யும் போது கீழ் குறிபிட்ட விபரங்கள் அடங்கிய தெளிவாக அட்டை அதில் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
அதன்படி புதிய வர்த்தக விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வர்த்தக விடுமுறையில் நகையின் விலை, நகை விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், வரிசை எண்(பார்கோடு),கேரட்(தரம்), எடை, நகையின் வகை , அதன் ஆயர் மதிப்பு மற்றும் லோப்களின் எடை உள்ளிடவை Prize tag-யில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவை வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையின் அமைச்சர் டாக்டர்.அப்துல்லா அல் சல்மான் அவர்கள் பிறப்பித்தார் என்று தினசரி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.