குவைத்தில் தடுப்பூசி பெறுவது தொடர்பாக சுகாதரத்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Image : Kuwait Moh
குவைத்தில் தடுப்பூசி பெறுவது தொடர்பாக சுகாதரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
குவைத்தில் கோவிட் பாதுகாப்பு தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் அஸ்ட்ரா செனெகா ஆகியவற்றின் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இடையேயான இடைவெளி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி ஃபைசர் பயோடெக் தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இடையேயான இடைவெளி 6 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 60- வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்ட கால நோயாளிகள் போன்றவர்களுக்கு இந்த இடைவெளி காலம் 3 வாரங்களாக தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
அஸ்ட்ரா செனெகா ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இடைவெளி கால அளவு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் தடுப்பூசியின் முதல் டோஸ் பெறுபவர்களுக்கு பொருந்தும். தற்போது தடுப்பூசிக்காக பதிவுசெய்யப்பட்டவர்களுக்கும், முதல் டோஸ் பெற்று, இரண்டாவது டோஸுக்காகக் காத்திருப்பவர்களுக்கும் ஊசி போடும் மையம், நாள், நேரம் போன்றவற்றைத் தெரிவிக்கும் குறுஞ்செய்தி(Massage) அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.