BREAKING NEWS
latest

Monday, May 24, 2021

குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் திறந்தவெளியில் வேலை செய்ய கட்டுபாடு விதிப்பு

குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் திறந்தவெளியில் வேலை செய்ய கட்டுபாடு விதிப்பு

Image : KuwaitCity

குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் தொழிலாளர்கள் திறந்தவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் வருகின்ற ஜூன்-1,2021 காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் மக்கள்(தொழிலாளர்கள்) வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மென்பாட்டு துறையின் அதிகாரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த முடிவு புதிய உத்தரவு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும். இந்த முடிவை மீறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும்,சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை நேரிட வேண்டியது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட எந்தவொரு மீறல்களையும் மேல் குறிப்பிட்ட நாட்களில் தங்கள் கவனத்திற்கு வந்தால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் மனிதவள மென்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவைத் உள்ளிட்ட அனைத்து வ‌ளைகுடா நாடுகளிலும் நாட்டில் வெப்பநிலை உச்சத்தை அடைகின்ற 3 மாத நாட்களில் பொதுமக்கள் திறந்தவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்படுவது பொதுவான விதிமுறை சட்டம் ஆகும். இவ்வளவு கடுமையாக கட்டுப்பாடுகள் இருந்தாலும் சில நிறுவனங்கள் மனிதாபிமானம் இல்லாமல் வேலை வாங்குவது வாடிக்கையான ஒன்றாகும்.

Add your comments to குவைத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் திறந்தவெளியில் வேலை செய்ய கட்டுபாடு விதிப்பு

« PREV
NEXT »