குவைத்தில் கோவிட் போராட்டத்தில் முன்நிரையில் சேவை செய்த ஊழியர்களுக்கு 600 மில்லியன் தினார்கள் போனஸாக வழங்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
Image : Kuwait Moh Nurses
குவைத்தில் கோவிட் போராட்டத்தில் முன்நிரையில் சேவை செய்த ஊழியர்களுக்கு 600 மில்லியன் தினார்கள் போனஸாக வழங்கப்படும்
குவைத்தில் கோவிட் நோய்க்கு எதிரான போராட்டத்தில் போராளிகளாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு போனஸ் வழங்க தேவையான நிதிக்கு குவைத் நாடாளுமன்றம் இன்று(27/05/21) ஒப்புதல் அளித்துள்ளது. பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று 600 மில்லியன் தினார்கள் போனஸாக வழங்குவதற்காக ஒப்புதல் அளித்தது. கொரோனா குவைத்தில் கண்டறியப்பட்ட பிப்ரவரி 24,2020 முதல் மே 31,2020 வரையிலான கால அளவு போனஸ் கணக்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. போனஸுக்கு தகுதியான சுகாதார ஊழியர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களில் உள்ள முன்னணி ஊழியர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் கமிஷனின் கீழ் உள்ள அரசு நிறுவனங்களின் ஊழியர்கள், கோவிட் தடுப்பு நடவடிக்கையில் ஆதரவு வழங்கிய ஊழியர்கள் என்று மூன்று வகையாக தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில் சேவை செய்யும் போது உயிரிழந்த ஊழியர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார்கள் மற்றும் உயிரிழந்த வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சம்பளத்தின் 10 மடங்கு போனஸாக வழங்கப்படும். வேலையின் ஒரு பகுதியாக கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் பாதிப்பில் இருந்து மீளும் வரையில் அவர்களின் சம்பளத்தின் இரண்டு மடங்கு அல்லது 8,000 தினார்கள் அல்லது இவற்றில் எந்த தொகை அதிகமோ அந்த தொகை வழங்கபடும்.முதல் பிரிவில் அதிக ஆபத்து உள்ள ஊழியர்களுக்கு, தினசரி ஊதியத்தின் இரண்டரை மடங்கும்,சராசரி ஆபத்து உள்ள ஊழியர்களுக்கு தங்களின் தினசரி சம்பளத்தின் ஒன்றரை மடங்கும் போனஸ் ஆக வழங்கபடும்.
இரண்டாவது பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு அதிக ஆபத்து உள்ள ஊழியர்களுக்கு வழங்கபடும் போனஸின் 50 சதவீதமும், மூன்றாம் பிரிவில் உள்ளவர்களுக்கு போனஸின் 25 சதவீதம் வழங்கபடும். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் கோவிட் போராளிகளுக்கு வழங்க வேண்டிய இந்த நிதிக்காக 65 உறுப்பினர்களில் 61 பேரின் ஆதரவுடன் போனஸ் வழங்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் பயனடைவார்கள்.