குவைத்தில் ரிங் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வீட்டு விநியோக பைக்குகளை தடை செய்ய திட்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் ரிங் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வீட்டு விநியோக பைக்குகளை தடை செய்ய திட்டம்
குவைத்தில் ரிங் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வீட்டு விநியோக பைக்குகளை தடை செய்ய குவைத் திட்டமிட்டுள்ளது. நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைக்கு போக்குவரத்துத் துறை தயாராகி வருகிறது. முக்கியமாக டெலிவரி பைக் டிரைவர்கள் சாலைகளில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதில்லை.இத்தகைய நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுதல் மற்றும் அதிக வேகத்தில் பைக்குகளில் பயணம் செய்வதால்,பல சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக போக்குவரத்துத் துறை கண்டறிந்துள்ளது.
கோவிட்டின் சூழலில், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான வீட்டு விநியோக சேவை மூலம் உணவு வழங்கப்படுகிறது. அதுபோல் பெரும்பாலான வீட்டு விநியோக சேவைகள் பைக்குகளைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதால், உணவகத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை தீவிரமடையும், மேலும் இத்துறையில் பணிபுரியும் பலர் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.