குவைத்திற்கு ஞாயற்றுக்கிழமை 4 லட்சம் டோஸ் அளவுக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் வருகின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது
குவைத்திற்கு ஞாயற்றுக்கிழமை 4 லட்சம் டோஸ் அளவுக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் வருகின்றன
குவைத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் ஏற்படும் நெருக்கடிக்கு தீர்வு காண சுகாதார அமைச்சகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட பலகட்ட முயற்சிகளைத் தொடர்ந்து ஞாயற்றுக்கிழமை 388,000 டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் குவைத்துக்கு வருகின்றன. இதன் மூலம் அஸ்ட்ரா செனெகாவின் மூன்றாவது Batch குவைத் வருகிறது என்ற தகவல் உறுதியாகியுள்ளது.முன்னதாக இரண்டு Batch-ஆக மூன்றரை லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து நாட்டிற்கு வந்தது,புதிய Batch-யின் வருகையுடன், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாமல் காத்திருக்கும் மூன்றரை லட்சம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வுகாண முடியும்.
முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக நாட்டில் துரிதமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த தடுப்பூசி சேவை மந்தமடைந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இரண்டாவது டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு பதிலாக மற்ற சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் வழங்குவது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. மேலும், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ்க்கு இடையேயான இடைவெளியை நீட்டிக்க அமைச்சகம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நான்காவது Batch அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி இரண்டு வாரங்களுக்குள் குவைத் வந்து சேரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.