குவைத் அரசு கடந்த வாரம் அறிவித்தபடி அவசரகால மருத்துவ நிவாரண பொருட்களை இன்று இந்தியாவுக்கு அனுப்பியது
குவைத்தில் இருந்து அவசரகால மருத்துவ நிவாரண பொருட்களை இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்தியாவில் கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளன நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட குவைத் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல்-26 அன்றைய மைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.இதையடுத்து இன்று(03/05/21) திரவ ஆக்ஸிஜன் உள்ள 40 டன் மருத்துவ பொருட்களுடன் குவைத் ராணுவ விமானம் புறப்பட்டது என்ற செய்தியை குவைத் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதுபோல் குவைத் Red Crescent Society சங்கத்தின் பொது இயக்குநர் அப்துல் ரஹ்மான் அல்-அவுன் கூறுகையில், விமானம் அப்துல்லா அல்-முபாரக் விமான தளத்திலிருந்து புறப்பட்டது என்று அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார்.நட்பு நாடான இந்தியாவுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுவது கடமையாகும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.