வெளிநாட்டினரை தாயகம் திரும்ப உரிமை உண்டு,அதை தடுப்பது சரியல்ல என்று தமர் அல் சுவைத் எம்.பி தன்னுடைய உரையின் போது தெரிவித்துள்ளார்.
Image : தமர் அல் சுவைத் எம்.பி
வெளிநாட்டினரை தாயகம் திரும்ப விடாமல் தடுப்பது சரியல்ல என்று குவைத் எம்.பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்
குவைத் நாட்டின் வளர்ச்சியில் பங்காளிகளாக வெளிநாட்டினருக்கும், குடிமக்களுக்கான அதே உரிமைகள் உண்டு என்று தமர் அல் சுவைத் எம்.பி தன்னுடைய உரையின் போது தெரிவித்துள்ளார். குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணிக்க அனுமதிக்கும்போது வெளிநாட்டவர்கள்(தொழிலாளர்கள்) தங்கள் நாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பது சரியானதல்ல என்றும் எம்.பி தெரிவித்தார்.
குடிமக்கள் பின்பற்றும் அதை நடைமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்கின்றனர், தர்மத்தின் கண்ணோட்டத்தில் பார்கும்போது இப்படி தடுப்பது சரியல்ல,அதுபோல் நாட்டின் சட்டபூர்வமான பார்வையில் பார்க்கும்போதும் இதுபோன்ற நடவடிக்கை தவறானது என்றார். ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் குடும்பத்திலிருந்து விலகி இருப்பவர்களும் இந்த நாட்டில் உள்ளனர்.இதை தடுக்காமல் இருப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை, ஆனால் இப்படி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.