குவைத்தில் பணிப்பெண் அடித்து சித்திரவதை;உயிரை மாய்க்க கழிவறை சுத்தம் செய்யும் மருந்தை குடித்தார்
குவைத்தில் பணிப்பெண் அடித்து சித்திரவதை;உயிரை மாய்க்க கழிவறை சுத்தம் செய்யும் மருந்தை குடித்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது
குவைத்தில் பணிப்பெண் அடித்து சித்திரவதை,உயிரை மாய்க்க கழிவறை சுத்தம் செய்யும் மருந்தை குடித்தார், இதையடுத்து தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நாட்டின் தலைமை கவர்னரேட்டில் உள்ள காவல் நிலைய அதிகாரிக்கு நீதிபதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை கைது செய்யவும் உத்தரவிட்டார். இது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த மாதம் 16 ஆம் தேதி, 26 வயதான பிலிப்பைன்ஸ் பணிப்பெண் தற்கொலை முயற்சி செய்ததாகவும் உயிரை மாய்த்து கொள்ள கழிவறை சுத்தம் செய்யும் மருந்தை குடித்தார் எனவும்,இதையடுத்து அன்று முதல் நேற்று வரையில் கோமா நிலையில் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பணிப்பெண் சிகிச்சை பெற்றுவந்த Amiri மருத்துவமனையில் இருந்து நினைவு திரும்பியதாக தகவல் கிடைத்த நிலையில் நேற்று மே-25 செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு சென்றனர்,மேலும் பணிப்பெண்ணிடம் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து கேட்டபோது,அவர் தனது Sponsore குவைத்தி என்றும், அவரால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அடிக்கடி அடிக்கவும் மற்றும் உதைக்கவும் செய்தனர் எனவும் இதை இவ்வளவு நாள் தாங்கிக் கொண்டதாகவும் ,மேலும் இதை சகிக்க முடியாத நிலையில் குளியலறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கப் சுத்தம் செய்யும் மருந்தை குடித்ததாக கூறினார். அங்கிருந்து தப்பி ஓட முயன்றாள் எனவும்,ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடைய மற்றோரு வழக்கில் பிலிப்பைன்ஸ் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செயல்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு குவைத்தி பெண்ணுக்கு மேல்முறையீடு நீதிமன்றம் இன்று(26/05/21) மரணதண்டனையை ரத்து செய்து 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.