கொரோனாவை வைத்து விசா கொடுத்து ஏமாற்றும் கும்பல்;300-ற்கும் மேற்பட்டவர்கள் அமீரகத்தில் தவிப்பு என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது
கொரோனாவை வைத்து விசா கொடுத்து ஏமாற்றும் கும்பல்;300-ற்கும் மேற்பட்டவர்கள் அமீரகத்தில் தவிப்பு
பல்வேறு வேலைவாய்ப்பு முகவர்களால்(இடைத்தரகர்களால்) கேரளாவைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு அதிக சம்பளம் உள்ளிட்ட வேலைவாய்ப்பு சலுகைகளை வழங்குவதாக மோசடி செய்யப்பட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி சேவைகள் பரவலாக இருந்த நாட்களில் அதிகமான செவிலியர்கள் தேவைப்பட்ட சூழ்நிலையை ஏஜென்சிகள் மோசடிகாக பயன்படுத்திக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் பலர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக வருவதாக வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர்.மேலும் ஏஜென்சிகள் மூலம் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி செவிலியர்கள் முகவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் தொலைபேசி எண்கள் அணைக்கப்பட்டுள்ளன. கேரளாவில்12,000 திர்ஹம் மதிப்புள்ள இந்திய ரூபாயை முகவர்களுக்கு பணமாக கொடுத்ததாக செவிலியர்கள் பலர் தெரிவித்தனர்.
ஏமாற்றப்பட்ட பலர் தாயகம் திரும்ப முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்து வேலை தேடுகிறார்கள். இரண்டு செவிலியர்கள் நீதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். துபாயில் உள்ள Indian Embassy மற்றும் Consulate ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பல்வேறு சமூக சங்கங்களுடன் தொடர்பு கொண்டு சிக்கித் தவிக்கும் செவிலியர்களுக்கு உதவி வருகின்றனர். வந்தவர்களில் பலர் சொந்தமாக முயற்சி செய்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புகளை பெற்று வேலைக்காக சேர்ந்துள்ளனர். எல்லோரும் இங்கு வேலை பெறவே விரும்புகிறார்கள் எனவும், வீட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பும் செவிலியர்களை தாயகம் அனுப்புவதற்கான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளதாக தூதரக அதிகாரி தெரிவித்தார்.