குவைத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 83,000 க்கும் மேற்பட்ட வீட்டுத் தொழிலாளர்களின் விசாக்கள் ரத்தாகியுள்ளது என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
குவைத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 83,000 க்கும் மேற்பட்ட வீட்டுத் தொழிலாளர்களின் விசாக்கள் ரத்தாகியுள்ளது
குவைத்தில், கடந்த இரண்டு மாதங்களில் 83,000 க்கும் மேற்பட்ட வீட்டுத் தொழிலாளர்களின் விசாக்கள்(Work Permit) ரத்தாகியுள்ளது.மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடையேயான இந்த குறுகிய நாட்களில் நாட்டில் மொத்தம் உள்ள வீட்டுத் தொழிலாளர்களில்83,463 நபர்களின் குறை ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு ஆவணங்கள் காலாவதி ஆனது, குடியிருப்பு ஆவணத்தை புதுப்பிக்காதது மற்றும் நாட்டிற்கு சென்று திரும்பாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களின் குடியிருப்பு அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள மொத்த வீட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஆனது 7,19,988 லிருந்து 6,36,525 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த வீட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 11.59 சதவீதம் குறைவை ஏற்படுத்தியுள்ளது.