குவைத்தில் தற்போது முழுமையான ஊரடங்கு ஏற்படுத்த தேவையில்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார்
குவைத்தில் தற்போது முழுமையான ஊரடங்கு ஏற்படுத்த தேவையில்லை
குவைத்தில் தற்போது முழுமையான ஊரடங்கு ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர்.காலித் ஜரல்லா இன்று(01/05/21) தெரிவித்துள்ளார். இருப்பினும்,நாட்டின் சுகாதார நிலையைப் பொறுத்து பகுதி ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட முடிவுகளை மறுஆய்வு செய்யப்படும் எனவும் அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.
இருப்பினும்,இந்த நோய் பரவுவது குவைத்தில் உள் வெளிநாட்டு மக்களிடையே அதிக அளவில் காணப்படுகின்றன எனவும்,குவைத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள நபர்களில் 65 சதவீத நோயாளிகள் வெளிநாட்டினர் என்று அவர் கூறினார். முன்னதாக, ரமழானின் கடைசி பத்து நாட்களில் நாட்டில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையி்ல் இவர் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.