ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 13 % குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது
Image : Oman
ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 13 % குறைந்துள்ளது
ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச்,2021 வரையிலான புள்ளிவிவரங்களின்படி. நாட்டில் உள்ள வெளிநாட்டினர் 13 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தரவுகளை ஓமான் தேசிய மக்கள் தொகை புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.
மார்ச் மாத நிலவரப்படி, அரசுத் துறையில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 53,332 லிருந்து 40,898 ஆகக் குறைந்துள்ளது. தனியார் துறையில், இந்த எண்ணிக்கை 16,08,781 இலிருந்து 14,03,287 ஆகக் குறைந்தது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை புள்ளிவிவரங்கள் சேர்க்கப்பட்டபோது, வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 218,000 குறைந்துள்ளது. இது மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் 13 சதவீதமாகும்.