குவைத்தில் உள்ள கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று(20/05/21) மாலையில் நகராட்சி இயக்குநர் வெளியிட்டுள்ளார்
Image : Kuwait Restaurant
குவைத்தில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது
குவைத்தில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி இயக்குநர் அகமது அல் மாஃபுஹி இன்று(20/05/21) வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்களின் விவரங்கள்:
- வாடிக்கையாளர்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுகிறார்கள்.
- உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் நெரிசலைக் குறைக்க, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே இருக்கைகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
- இரவு 8 மணிக்குப் பிறகு வெளிப்புற ஆர்டர்கள் மற்றும் விநியோக சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
- காகித நோட்டுகளின் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு குறைக்க மின்னணு கட்டண முறைகளைப் பயன்படுத்த வேண்டும்
- தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதற்கு முன்பும், பணியிடத்திலும் சுய கண்காணிப்பு செய்ய வேண்டும், மேலும் தங்களுக்கு உடல்நல பிரச்சனைகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு வாடிக்கையாளரும் உணவகங்களில் உடல் வெப்பநிலையை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். 37.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பத்தை உள்ள நபர்களை அனுமதிக்க கூடாது
- இருக்கைகளுக்கு இடையிலான தூரம் குறைந்தது 2 மீட்டர் இருக்க வேண்டும்.
- உணவகத்தில் உள்ள தொழிலாளர் சமையலுக்காக பயன்படுத்தும் பொருட்களை அவ்வப்போது கண்டிப்பாக கிருமி நீக்கம் செய்யுங்கள்.
கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கும் புதிய உத்தரவு மே- 23,2021 முதல் அமலுக்கு வருகின்றன.