BREAKING NEWS
latest

Saturday, May 1, 2021

குவைத்தில் மக்கள் அடர்த்தியான பகுதிகளில் கியாம் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் கியாம் தொழுகைக்கு மக்கள் அடர்த்தியான பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் மக்கள் அடர்த்தியான பகுதிகளில் கியாம் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் சிறப்பு பிரார்த்தனையான கியாம் அல்-லெயில்(Qiyam-Al-Layl) தொழுகைக்கு மக்கள் அடர்த்தியான பகுதிகளில் தடை விதித்து மத விவகார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெலீப், சல்மியா, மஹாபூலா, ஹவேலி, மைதன் ஹவேலி மற்றும் நுக்ராவில் உள்ள மசூதிகளில் இந்த தடை விதிக்கப்பட்டது. மற்ற இடங்களில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

முக்கிய நிபந்தனைகள் என்னவென்றால், கியாம் அல்-அலைல் பிரார்த்தனை இரவு 12 மணிக்குப் பிறகு தொடங்கி அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதாகும். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொழுகையில் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் முன்னர் அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேற்குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளைத் தவிர, முன்னர் தாராவீஹ் தொழுகை நடந்த அனுமதி வழங்கிய அனைத்து மசூதிகளிலும் கியாம் அல்-லெயில் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Add your comments to குவைத்தில் மக்கள் அடர்த்தியான பகுதிகளில் கியாம் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »