அமீரத்தில் காணாமல் போன முன்று வயது இந்திய குழந்தை ஆபத்தான மலை பகுதியில் இரவு முழுவதும் தேடி பத்திரமாக கண்டுபிடித்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்
Image credit: கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்
அமீரத்தில் காணாமல் போன 3-வயது இந்திய குழந்தை ஆபத்தான பகுதியில் இரவு முழுவதும் தேடி பத்திரமாக கண்டுபிடித்த அதிகாரிகள்
அமீரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை காணாமல் போன ஒரு இந்திய குழந்தையை கண்டுபிடித்ததாக ராஸ் அல் கைமா போலீசார் இன்று(22/05/21) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளனர். ராஸ் அல் கைமாவில் உள்ள யானிஸ் மலைத்தொடரில் மூன்று வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். குழந்தையின் நிலைமை குறித்து பெற்றோர்கள் பெரும் கவலை கொண்டிருந்த நிலையில் இன்று(22/05/21) சனிக்கிழமை காலையில் ஆறுதல் செய்தியை பெற்றொருக்கு வழங்க முடிந்ததாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ராஸ் அல் கைமா காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் குழு இந்த தேடலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை(நேற்று) சூரிய அஸ்தமனத்தில் குழந்தையை காணவில்லை என்று ராஸ் அல் கைமா போலீசாரின் அவசரகால உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. குடும்ப பொழுதை கழிக்க அந்த இடத்திற்கு வந்திருந்த நிலையில் குழந்தையை திடிரென காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் அதாகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறப்பு தேடுதல் குழுவை அமைத்தது தேடுதல் நடவடிக்கையினை முடுக்கி விட்டனர். குற்றப் புலனாய்வு பிரிவு, ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்பு, மீட்பு மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் குழு, போலீஸ் கே -9 பிரிவு, அல் தக்தாதா காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் ரோந்து குழுக்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் ஹசா பாசா சாஹச குழு மற்றும் தேசிய தேடல் மீட்பு மைய குழுவை சேர்ந்து ஹெலிகாப்டர் உள்ளிடவை மலைப்பகுதியில் பயங்கரமான ஆபத்தான பகுதிகள் மற்றும் இருளாக இருந்தபோதிலும் தேடல் நடவடிக்கையில் தீவிரமாக நடத்தப்பட்டது.
பன்னிரண்டு மணி நேரம் கழித்து, ஹசா பாசா சாகசக் குழு உறுப்பினர் ஒருவர் சனிக்கிழமை(இன்று) காலை 6 மணியளவில் குழந்தையைக் கண்டுபிடித்தார். தூங்கும் நிலையில் குழந்தையை குறிப்பிடத்தக்க காயங்கள் எதுவும் இல்லாமல் கண்டுபிடிக்க நிலையில் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மலைகளுக்கு வருபவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றுமு ராஸ் அல் கைமா போலீசார் தெரிவித்தனர். மேலும் தேடலில் ஈடுபட்ட அனைவருக்கும் பொலிசார் நன்றியை தெரிவித்தனர்.