குவைத்தில் ரமலான் மே-13 ஆக இருக்கும் என்று இன்று மாலையில் வானிலை நிபுணர் தெரிவித்துள்ளார்
குவைத்தில் ரமலான் மே-13 ஆக இருக்கும் என்று வானிலை நிபுணர் தெரிவித்துள்ளார்
குவைத்தில் வானியலாளர் டாக்டர்.சலே-அல்-அஜிரி இன்று(05/05/21) புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல் அடிபடையில் மே-13 வியாழக்கிழமை அன்று ரமலான் தினமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். வானியல் தரவுகளின் அடிபடையில் மாலையில் அவர் இதை தெரிவித்தார் என்று குவைத் தினசரி நாளிதழ்கள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் நேரத்தின் அடிப்டையில் வானியல் கணக்கீடுகளின்படி மே-11 செவ்வாய்க்கிழமை பிறை இரவு 10.01 மணிக்கு பிறக்கிறது என்றும், மே-12 புதன்கிழமை மாலை 6:31 மணிக்கு சூரியன் மறைகிறது என்றும் அல்-அஜிரி கூறினார். அதே நாளில் இரவு 7:10 மணிக்கு சந்திரன் தெரியும் எனவும்,மே-12 புதன்கிழமை சந்திரன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 39 நிமிடங்களில் தெரிவதை காணலாம் என்று காலண்டர் கணக்கீடுகள் காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மே-12 புதன்கிழமை,சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சந்திர மாதத்திற்குள் நுழைவதற்கான நிபந்தனை பூர்த்தி செய்யப்படுவதாகவும்,எனவே மே-13,2021 வியாழக்கிழமை ஈத் அல்-பித்ரின் முதல் நாளாக மாறும் என்றும் அவர் விளக்கினார். மேலும் ஈத் தொழுகைக்கான நேரம் சரியாக அதிகாலை 5:12 மணிக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.