குவைத்தில் 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா புதுப்பித்தலுக்கான விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு சமூக வலைத்தளங்களில் குடிமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
குவைத்தில் வயதான வெளிநாட்டினர் விசா புதுப்பித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு குடிமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
குவைத்தில் தங்கியுள்ள உயர்நிலைப் பள்ளி கல்வித் தகுதி இல்லாத 60-வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா புதுப்பித்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக குவைத்திகள் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குவைத் கலைஞர் முகமது ஷரஃப் ட்விட்டரில் "நான் எதிராக இருக்கிறேன் " என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு பிரச்சாரத்தைத்(Campaign) தொடங்கினார், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவை அவர் அறிவித்தார். இதை தொடர்ந்து இதற்கு ஆதரவளிக்கும் விதமாக பல குவைத் குடிமக்கள் முன்வந்துள்ளனர்.
மேலும் இந்த பிரிவை சேர்ந்த வெளிநாட்டினர் குவைத்தின் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் குவைத்தில் பிறந்தவர்கள் அல்லது அவர்களது குடும்பங்கள் குவைத்தில் வசிக்கிறார்கள் எனவும், அவர்கள் எங்கே போகிறார்கள்...??? என்று Campaign-யில் பங்கேற்ற பலர் கேட்டுள்ளனர். இந்த முடிவு முற்றிலும் இனவெறி என்றும் அவர்களை வெளியேற்றினால் நாட்டின் ஆசீர்வாதம் இழக்கப்படும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், சிலர் இந்த ஆதரவு பிரச்சாரத்திற்கு எதிராகவும் முன்வந்துள்ளனர். வயதான வெளிநாட்டினரின் வீடு அல்ல குவைத் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹம்மத் மாதர் கருத்து தெரிவித்துள்ளார்.