BREAKING NEWS
latest

Friday, May 21, 2021

பஹ்ரைனில் இருந்து சாலை வழியாக சவுதியில் நுழைய புதிய விதிமுறைகள்

பஹ்ரைனில் இருந்து சாலை வழியாக சவுதி அரேபியாவில் நுழைவதற்கான புதிய வழிகாட்டுதல்களை அந்நாடு உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது

பஹ்ரைனில் இருந்து சாலை வழியாக சவுதியில் நுழைய புதிய விதிமுறைகள்

பஹ்ரைனில் இருந்து தமாம் கிங் ஃபஹத் கடல் பாலம் வழியாக சவுதி அரேபியாவிற்குள் நுழைய புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். வேலை விசா, சுற்றுலா மற்றும் Visit விசாக்களில் சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு இந்த புதிய அறிவிப்பு பொருந்தும். புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பி.சி.ஆர் சோதனையின் எதிர்மறை சான்றிதழ் கொண்டு வரவேண்டும். சவுதி அரேபியாவில் ஃபைசர்-பயோ என்டெக், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா (கோவ்ஷீல்ட்) மற்றும் மொடெனா தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இவற்றின் இரண்டு டோஸ் எடுத்தவர்கள் மற்றும் ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்து 14 நாட்கள் முடித்தவர்களுக்கும் அனுமதி வழங்கபடும். அவர்களுக்கு இனி கோவிட் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் தேவையில்லை.

தடுப்பூசி போடாமல் எல்லையில் வருகின்ற நபர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கிங் ஃபஹத் கடல்பால ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் சவுதி குடிமக்கள் தடுப்பூசி போடவோ அல்லது நாட்டிற்குள் நுழைய பி.சி.ஆர் பரிசோதனை செய்யவோ தேவையில்லை. 18-வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள்(வெளிநாட்டினர்) சவுதி அரேபியாவிற்குள் நுழைந்து ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். பி.சி.ஆர் சோதனை ஆறாவது நாளில் செய்யப்பட வேண்டும்.

சவுதிகளின் வெளிநாட்டு மனைவிகள், கணவர்கள், குழந்தைகள், வீட்டுப் பணியாளர்கள், தூதர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் இவர்களின் வீட்டுப் பணியாளர்களும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் எதிர்மறை முடிவை எல்லையில் காட்ட வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் அல்லது கோவிட் பரிசோதனை தேவையில்லை. தடுப்பூசி எடுக்காதவர்கள் சவுதி அரேபியாவிற்குள் நுழைந்து ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அதேபோல் பி.சி.ஆர் சோதனை ஆறாவது நாளில் செய்யப்பட வேண்டும். ஆனால் லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவசியம் இல்லை.

Add your comments to பஹ்ரைனில் இருந்து சாலை வழியாக சவுதியில் நுழைய புதிய விதிமுறைகள்

« PREV
NEXT »