BREAKING NEWS
latest

Saturday, May 29, 2021

சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 11 நாடுகளின் மீதான பயணத் தடையை நீக்கியுள்ளது

சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 11 நாடுகளின் மீதான பயணத் தடையை நீக்கியுள்ளாதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது

சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 11 நாடுகளின் மீதான பயணத் தடையை நீக்கியுள்ளது

சவுதி அரேபியா ஆனது தீவிரமடைந்துள்ள கோவிட் பரவல் காரணமாக அமீரகம்,இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு நேரடியாக பயணிகள் நுழைய தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று(29/05/21) சற்றுமுன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 11 நாடுகளின் மீதான பயண தடைகளை நீக்கியுள்ளாதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், யு.கே, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் நுழைய விதித்திருந்த தடையை சவுதி அரேபியா மீண்டும் நீக்கியுள்ளது. புதிய ஊத்தரவின்படி நாளை(30/05/21) ஞாயற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் மேற்குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சவுதியில் நேரடியாக நுழைய முடியும்.

இந்த புதிய உத்தரவை சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. ஆனால் இந்தியா மீதான தடை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேரடியாக நுழைய முடியாத இந்தியர்களுக்கு இது ஆறுதலான செய்தியை ஆகும். அமீரகம் இந்தியா மீதான தற்காலிகமாக தடையை நீக்கினால், இந்தியர்கள் அமீரகத்தில் முன்னர்போல் மீண்டும் தற்காலிகமாக தங்கியிருந்து சவுதி உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் நுழையும் வாய்ப்பு பிறக்கும் என்று நம்பலாம். மேலும் அமீரகம் மற்றும் சவுதி அரேபியா இந்தியா மீதான தற்காலிக தடையை நீக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

தடை விதிக்கப்பட்டுள்ள 20 நாடுகளில் 11 நாடுகளின் மீதான தடையை இப்போது சவுதி அரேபியா நீக்கியுள்ள நிலையில்,இந்தியா உட்பட ஒன்பது நாடுகளின் மீதான தடை தொடர்ந்நு நடைமுறையில் இருக்கும். மேலும் தடை நீக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட 11 நாடுகளின் வழியாக சவுதி அரேபியாவில் நுழைவோருக்கு ஒரு வார நிறுவன தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) கட்டாயமாகும். அதேபோல் இந்த 11 நாடுகளில் கோவிட் நோயின் பரவல் குறைந்துவிட்டது என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் சவுதி உள்துறை அமைச்சகம் இந்த முடிவு எடுத்துள்ளது.

Add your comments to சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 11 நாடுகளின் மீதான பயணத் தடையை நீக்கியுள்ளது

« PREV
NEXT »