BREAKING NEWS
latest

Wednesday, May 5, 2021

சவுதியில் அரசு மற்றும் தனியார் துறை ரமலான் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

சவுதி அரேபியாவில் அரசு மற்றும் தனியார் துறை ரமலான் விடுமுறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Image : மக்கா உள்ளே தொழுகை

சவுதியில் அரசு மற்றும் தனியார் துறை ரமலான் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

சவுதியில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பொருந்தும் ரமலான் பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அரசு துறையில் ரமலான் 25 வெள்ளிக்கிழமை(மே 7) முதல் ஷவ்வால் 5-ஆம் தேதி வரை விடுமுறையாக இருக்கும். இதன் காரணமாக அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் ரமலான் 24 வியாழக்கிழமை அன்றுடன் மூடப்படும். ஷாவால்-6 அன்று விடுமுறைக்கு பிறகு அரசுத்துறைக்கு மீண்டும் வேலை நாளாக இருக்கும்.

அதுபோல் தனியார் துறையில், ரமலான்-29 செவ்வாய்க்கிழமை(மே 11) விடுமுறைக்கு முந்தைய வேலை நாளாக இருக்கும். தனியார் துறைக்கு நான்கு நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்றும் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

Add your comments to சவுதியில் அரசு மற்றும் தனியார் துறை ரமலான் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »