குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஜூன்-1 முதல் புறப்பட 3 தினார் மற்றும் நுழைய 2 தினார் என்ற விகிதத்தில் சேவை கட்டணம் நடைமுறைக்கு வருகின்றன
Image : Kuwait Airport
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஜூன்-1 முதல் சேவை கட்டணம் நடைமுறைக்கு வருகின்றன ன
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வருகின்ற பயணிகளுக்காக முன்னர் நிர்ணயம் செய்யப்பட்ட சேவை கட்டணம் ஜூன்-1,2021 முதல் நடைமுறைக்கு வருகின்றன. விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கு 3 தினாரும் மற்றும் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு 2 தினாரும் கட்டணம் வசூலிக்கப்படும். 32/2021 பிரிவின்படி உள்ள அமைச்சரவை தீர்மானம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 600 மில்லியன் தினார்களை அரசின் பொது கருவூலத்திற்கு நிதியாக சேரும்.
ஆனால் தனிநபர்களிடமிருந்து(பயணிகளிடமிருந்து) நேரடியாக கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக,இந்த கட்டணம் விமான நிறுவனங்களிலிருந்து வசூலிக்கபடும். எனவே பயணிகள் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் விமான நிறுவனங்களும் அத்துடன் சேர்த்து இந்த கட்டணத்தை வசூலிப்பார்கள் என்று தெரிகிறது. கடந்த வருடம் இது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நேரத்தில் விமான பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்ட செய்தி தினசரி நாளிதழ்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.