BREAKING NEWS
latest

Tuesday, May 4, 2021

அபுதாபி பிக்-டிக்கெட்டில் இலங்கை நாட்டவர் 12 மில்லியன் திர்ஹம் வென்றார்

அபுதாபி பிக்-டிக்கெட்டில் இலங்கை நாட்டவர் 12 மில்லியன் திர்ஹம் வென்றார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : முகமது மிஷ்பக்(வயது-36)

அபுதாபி பிக்-டிக்கெட்டில் இலங்கை நாட்டவர் 12 மில்லியன் திர்ஹம் வென்றார்

துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முகமது மிஷ்பக்(வயது-36) மெகா ஜாக்பாட்டை வென்றார். மிஷ்பக் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் இந்த வெற்றி செய்தி தொடர்பான அழைப்பு தன்னுடைய மொபைலில் வந்தது என்று அவர் கூறியுள்ளார். மிஷ்பக் தான் வென்ற டிக்கெட்டை மற்ற 20 பேருடன் பகிர்ந்து கொள்கிறார் எனவும்,இதில் எனது பங்கு சுமார் 600,000 திர்ஹம் ஆகும்,நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

என்னுடைய தந்தையை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்,இந்த பணம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தான் மாதம் 7000 திர்ஹம் சம்பாதிக்கும் விற்பனை துறையில் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். டிக்கெட் எடுக்க பங்களித்த மற்ற நண்பர்களும் என்னைப் போலவே மிகவும் உற்சாகமாக உள்ளனர். சீக்கிரம் பணத்தை பெற்றுகொள்ள சொல்லும்படி அவர்கள் என்னை அமைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மே-3 திங்கள் அன்றைய பிக் டிக்கெட் ஒன்று அல்ல மூன்று புதிய மில்லியனர்களை உருவாக்கியுள்ளது அவர்களின் விபரங்கள்.

1 வது பரிசு தொகை வெற்றியாளர் டிக்கெட் எண் கிராண்ட் பரிசு 12,000,000 மொஹமட் மிஷ்பாக் 054978 இலங்கை, 2 வது பரிசு 3,000,000 அபு மம்மன் பாபு 232268 இந்தியன், 3 வது பரிசு 1,000 000 அனுஜ் தியாகராஜன் 263556 இந்தியன், 4 வது பரிசு 100,000 முகமது அல்ஷேஹி 108273 ஐக்கிய அரபு அமீரகம், 5 வது பரிசு 90 000 நஜீத் உல்லா 151521 பாகிஸ்தான், 6 வது பரிசு 80 000 விஜயகுமார் ஜெயசித்தையா 115126 இந்தியா, 7 வது பரிசு 70 000 மரியா எலெனா பெனாவிடெஸ் 201405 பிலிப்பைன்ஸ், 8 வது பரிசு 60 000 சனில் கிமர் ஜனார்த்தனன் 170681 இந்தியா, 9 ட்ரீம் கார் போர்ஷே 718 கட்டுபாய் ஹக்கிமுடின்பாய் ராஜன்பூர்வாலா 009630 இந்தியன்

மேலும் முகமது மிஷ்பக் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வசிப்பவர்.தனது நண்பர்களுடன் தங்கியிருக்கிறார், அதே நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இலங்கையில் வசித்து வருகின்றனர். மிஷ்பக் தனது 20 நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிக் டிக்கெட்டை வாங்குகிறார் என்றார். பிக் டிக்கெட்டில் பங்கேற்க அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாக பணம் திட்டுவார்கள். வென்ற பணத்தின் பெரும்பகுதி தனது குடும்பத்தின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கும் செலவிடப்படும் என்றார்.

Add your comments to அபுதாபி பிக்-டிக்கெட்டில் இலங்கை நாட்டவர் 12 மில்லியன் திர்ஹம் வென்றார்

« PREV
NEXT »