இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை ஜூன்-30 வரை நீட்டித்துள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துள்ளது
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக மற்றும் பயணிகள் விமானங்களுக்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. இந்த தடை ஜூன் 30 வரை அமலில் இருக்கும் என்று டிஜிசிஏ இன்று(28/5/21) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் டிஜிசிஏ யால் அனுமதி வழங்கப்பட்ட சிறப்பு விமானங்களுக்கு பொருந்தாது.
கோவிட் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் 30 முதல் இந்தியாவில் அனைத்து சர்வதேச வணிக மற்றும் பயணிகள் விமானங்களுக்கான தடை அமலில் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சர்வதேச விமானங்கள் இந்தியாவின் இருதரப்பு Air-Bubble ஒப்பந்தத்தின் கீழ் பல நாடுகளுடன் பயணிகளின் போக்குவரத்து இடையூறு இல்லாமல் இயக்கப்படுகின்றன. அமெரிக்கா, யு.கே,வளைகுடா,கென்யா,பூட்டான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளுடன் இந்தியா Air-Bubble ஒப்பந்தங்களை செய்துள்ளது.
Image credit: DGCA