தன்னுடைய வாழ்நாளில் 150 முறை இரத்த தானம் செய்து;உலகிற்கு முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்
Image : உயிரிழந்த பைஜு
150 முறை இரத்த தானம் செய்து;முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியர் உயிரிழந்தார்
தன்னுடைய வாழ்நாளில் 150 முறை இரத்த தானம் செய்து உலகிற்கு முன்மாதிரியாக விளங்கிய இந்தியா,கேரளா மாநிலம்,திருவனந்தபுரம் நெல்லிமூடு நகரைச் சேர்ந்த பைஜு என்ற நபர் கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். அவர் கடந்த சில நாட்களாக ஒரு தனியார் மருத்துவமனையில் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். நெல்லிமூடில் தொழிலதிபராக இருந்த பைஜு, பல்கலைக்கழக கல்லூரியில் மாணவராக இருந்தபோது காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் செய்ய முடிவு செய்தார். முதல் கட்டத்தில், அவர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இரத்த தானம் செய்வார், ஆனால் பின்னர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரத்த தானம் செய்து வந்தார். சர்வதேச இரத்ததான தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்து 150-வது முறையாக இரத்ததானம் செய்தார் என்ற சாதனையை நிறைவு செய்திருந்தார். கோவிட் பரவலின் முதல் கட்டத்தில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள பலருக்கு இரத்த தானம் செய்ய பைஜு ஒரு முன்மாதிரியாக நிகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.