குவைத்தில் நுழையும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது
Image : Official Soure
குவைத்தில் நுழையும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் வெளியாகியுள்ளது
குவைத்துக்குள் நுழையும் பல்வேறு வகையான பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று(18/05/21) செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,குவைத் சுகாதரத்துறை மூலம் அங்கிகாரம் வழங்கப்பட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் மூலம் தடுப்பூசி எடுக்க முடியாத நபர்கள் மற்றும் செல்லுபடியாகும் சான்றிதழுடன் விமான நிலையம் வருகின்ற குவைத்தி கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு புதிய முடிவின்படி விலக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டிற்கு வந்த மூன்று நாட்களுக்குள் அவர்கள் நோயிலிருந்து விடப்பட்டுள்ள நபர்கள் என்பதை நிரூபிக்கிற பி.சி.ஆர் ஆய்வு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோல் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுதவிர வெளிநாட்டினர் குவைத்தில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. குவைத்லிருந்து இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,நேபாளம் மற்றும் பங்காளதேஷ் உட்பட ஐந்து நாடுகளுக்கு பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கும் இந்த கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது, அதேநேரம் இந்த நாடுகளில் இருந்து குவைத்திற்கு நேரடியாக சரக்கு விமான சேவை மட்டுமே மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் இந்த மாதம் 22-ஆம் தேதி சனிக்கிழமை முதல், நாட்டிற்கு வெளியே பயணம் செய்யும் குடிமக்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக இருக்கும். மேலும் இந்த மாதம் 23-ஆம் தேதி முதல், உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும் எனவும் முடிவு செய்து தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.