சவுதியில் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டது;தனிமைப்படுத்தல் இவர்களுக்கு தேவையில்லை உள்ளிட்ட பல புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது
Image credit: Saudi Airlines
சவுதியில் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் துவங்கப்பட்டது;தனிமைப்படுத்தல் இவர்களுக்கு தேவையில்லை
சவுதியில் சர்வதேச விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து, சவுதி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய நிபந்தனை என்னவென்றால், சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் அந்தந்த நாட்டின் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஃபைசர், அஸ்ட்ரா சேனகா மற்றும் மொடெனா தடுப்பூசிகளை 2 டோஸ் எடுத்தவர்களுக்கும், ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்தவர்களுக்கும் இந்த மாதம் 20 இலிருந்து நிறுவன தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் தடுப்பூசி எடுத்தவர்களுக்கும், ஒரு டோஸ் எடுத்து 14 நாட்கள் முடித்தவர்களுக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். பயணிகள் தவக்கல்னா பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அதில் உள்ள சுகாதார தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
38 டிகிரி செல்சியஸுக்கு மேல் உடல் வெப்பநிலை உள்ளவர்கள் நாட்டில் நுழைவதற்கு தடை விதிக்கப்படும். எதாவது சேவைகள் சம்பந்தப்பட்ட கட்டணம் செலுத்த நேரிட்டால் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும். விமானத்தில் இடைவெளி விட்டு தூரத்தில் அமர்ந்து பயணிகள் அமர வேண்டும். பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் பயணம் முழுவதும் முகமூடி கையுறைகளை அணிய வேண்டும்.
விமானத்தில் பிரார்த்தனை வசதி உண்டு என்றால் அதை மூடப்பட வேண்டும்.கோவிட் நேர்மறை(Positive) சந்தேக நபர்கள் தனி இருக்கைக்கு மாற்றப்பட்டு சக பயணிகளுடன் தொடர்புகொள்வதைத் தடுக்க வேண்டும். நோயாளி மற்றும் அவர்கள் பொருட்கள் இலக்கை அடைந்தவுடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி விமான நிலையத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது.