சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்து இரண்டு இந்திய இளைஞர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த இளைஞர்கள்
சவுதியில் நடந்த கார் விபத்து இரண்டு இந்திய இளைஞர்கள் உயிரிழந்தனர்
சவுதி அரேபியாவின் ரியாத் அருகே அல்ரைனில் நடந்த சாலை விபத்தில்,கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இறந்தவர்கள் முகமது அலி என்பவரின் மகன் முகமது வசீம்(வயது-34) மற்றும் முபாரக் என்பவரின் மகன் முகமது முனீப்(வயது-29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈத் அல் பித்ரில் நாளில் தமம்த்திலிருந்து அபாவுக்கு சென்று பின்னர் திரும்பும் வழியில் அவர்கள் பயணித்த கார் எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவம் காலை 6 மணிக்கு நடந்தது. இந்த பயங்கரமான விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் அல்ரைன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.காரில் இருந்த மற்றொரு நபர் படுகாயமடைந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.