குவைத்தில் கொரோனா தடுப்பூசிகளை திருடி விற்பனை செய்த இரண்டு செவிலியர்களை அதிகாரிகள் கைது செய்தனர்
குவைத்தில் தடுப்பூசிகளை திருடிய இரண்டு செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்
குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பூசிகளைத் திருடி விற்பனை செய்த இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த இரண்டு செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஃபைசர் தடுப்பூசிகளைத் திருடி சில ஆசியா நாட்டவர்களுக்கு பணத்தை பெற்று விற்பனை செய்ததாகவும் மற்றும் சில ஆசிய நாட்டவர்களுக்கு வீடுகளில் வைத்து தடுப்பூசி போடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நிலையில் இரகசிய பிரிவு அதாகாரிகள் இவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதுபோல் இந்தோனேசியா பெண்கள் இருவர் சட்டவிரோதமாக கோவிட் தடுப்பூசியை இவர்களிடம் எடுத்துக்கொண்டாதகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கூடுதல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட குற்றபிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களுக்கு தடுப்பூசிகளை திரட்டுவதற்காக வாய்ப்புகள் எப்படி அமைந்தது உள்ளிட்ட கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.