இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான(UAE) பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது என்று சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான(UAE) பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் வருவதற்கான தடை ஜூன்-14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இன்று(23/05/21) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதுபோல் 14 நாட்களுக்குள் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் மற்ற இடங்கள் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க முடியாது. இந்தியாவில் நிலவியுள்ள கோவிட் நெருக்கடியை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் மற்றும் விமானத் போக்குவரத்து துறை இணைந்து இந்த நுழைவுக்கு தடை விதித்தது.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினருக்கும்(குடிமக்கள்) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் உள்ளவர்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு கோவிட் நெறிமுறையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.