குவைத்தில் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு சான்றிதழ் வழங்கபடும்;இதன் மூலம் சில சலுகைகள் பெற முடியும்
குவைத்தில் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு சான்றிதழ் வழங்கபடும்
குவைத்தில் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு தடுப்பூசி முடித்தவர்களுக்கு வழங்கபடும் சான்றிதழ்கள் வழங்குவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே நிறுவனத்தின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெறாதவர்களுக்கும், இரண்டாவது டோஸ் எடுக்க Appointment கிடைக்காதவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த சான்றிதழ்களைப் பெறுபவர்கள் பயணம்,வேறு சில இடங்களில அரசு சார்ந்த சேவைகள் பெற உள்நுழைவு தொடர்பான வசதிகளைப் பெற முடியும் என்றார். இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்குச் செல்லும் குடிமக்களுக்கு கோவிட் தடுப்பூசி கட்டாயமாகும் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் நாட்டிற்குள் நுழைய முதல் டோஸ் பெற்று 5 வாரங்கள் கடக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
மேலும் குவைத்தில் ஈத் அல்-பித்ர் விடுமுறையை முன்னிட்டு சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில்,தியேட்டரில் நுழைய நோய்த்தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தற்போது,நாட்டில் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக, முதல் டோஸ் எடுத்துள்ள பெரும்பாலான மக்கள் இரண்டாவது டோஸ் பெறுவதில் தாமதத்தை சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க அமைச்சரகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.