BREAKING NEWS
latest

Monday, June 7, 2021

குவைத்தில் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்த சிறுவன் உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்த 13-வயது சிறுவன் விபத்தில் உயிரிழந்த சோகமான செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Image : உயிரிழந்த சிறுவன்

குவைத்தில் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்த சிறுவன் உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் ஜராஹ் என்ற 13- வயது சிறுவன்(பிதுனி-Bidoon) மாணவன் பூக்களை எடுத்துக்கொண்டு ஜஹ்ராவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள ரவுடாவுக்கு தினமும் செல்வான். இந்த ஜூன் மாதத்தில் 50 டிகிரி செல்சியஸ்வெப்பத்தையும் அவன் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால்,அவனுக்கு முன்னால் வாழ்க்கையின் உண்மையான யதார்த்தங்கள் இருந்தன. அவனது வேலையற்ற பெற்றோருக்கும், உலகமே என்னவென்று தெரியாத 5 சகோதரர்களுக்கும் உணவளிக்க, பூக்களை விற்பனை செய்து அவர்களுடைய தினசரி வாழ்வாதாரமாக ஜராஹ் இருந்தார்.

அவன் ஒரு பூக்கடையில் இருந்து வாங்குகின்ற பூக்களை பிரதானமான வீதிகளில், போக்குவரத்து சிக்னல்களில் நின்று விற்பனை செய்து கிடைக்கின்றன,சில்லறைகள் மூலம் குடும்பத்தின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்து வந்தான் பூக்கள் விற்பனையிலிருந்து கிடைக்கும் பணம், பூக்கள் தேவையில்லை என்றாலும் கூட, அந்த வழியாக செல்கின்ற நல்ல மனிதர்களின் உதவியும் அவனுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை, பூக்கள் விற்பனை செய்துக்கொண்டு இருக்கும் பொது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவன் மீது ஏறி இறங்கியத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சிறுவனின் கதை குவைத்தில் வாழுகின்ற அனைத்து நாட்டினர் இடையே பெரும் துயரத்தை ஏற்படுத்து உள்ளது.

தனது அடையாளத்தை நிரூபிக்க முடியாமல் 'பிதுனி' அல்லது "எதுவும் இல்லாத ஒருவர்" என்ற பட்டியலில் நாட்டில் வசிக்கின்ற ஒன்றரை லட்சம் மக்களில் அவனும் ஒருவன்.ஜராஹின் எட்டு பேர் கொண்ட குடும்பம் ஜஹாராவின் அல்வா பகுதியில் ஒரு சிறிய வாடகை அறையில் வசித்து வந்தது. கொரோனா நெருக்கடி ஏற்பட்டபோது அவரது தந்தை தனது சிறிய வேலையையும் இழந்தார். இதன் மூலம், அவர் வாடகை செலுத்த முடியாமல் வழக்கும் நிலுவையிலுள்ள நிலையில்,வீட்டை காலி செய்ய நீதிமன்ற உத்தரவுடன் வீட்டின் உரிமையாளர் வந்தபோது, அத்தியாவசிய வீட்டு பொருட்களை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள பொருட்களை தொலைதூர சகோதரரின் வீட்டிற்கு எடுத்துச்செல்ல தயாராகி கொண்டிருந்தபோது குடும்பத்தில் ஏற்பட்ட மற்றொரு சோகமாக ஜராஹின் மரணம் அமைந்துள்ளது.

ஜராஹ் குவைத் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்,மோசமான வாழ்க்கை நிலையிலும் படிப்பில் சிறந்து விளங்கினார் என்பதை கண்ணீருடன் தந்தை நினைவு கூர்ந்தார். விபத்து நடந்த உடனேயே உடல் அமிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் இல்லாததால் உடல் திரும்ப ஒப்படைக்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டதாக அவர்(தந்தை) புலம்பினார். குவைத் ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்த செய்தியை வெளியானதை தொடர்ந்து, பிதுனிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வந்துள்ளனர்.

Add your comments to குவைத்தில் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்த சிறுவன் உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »