குவைத்தில் ஆகஸ்ட் முதல் வருகின்ற வீட்டுத் தொழிலாளர்கள் நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் ஆகஸ்ட் முதல் வருகின்ற வீட்டுத் தொழிலாளர்கள் 14 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல்
குவைத் சுகாதாரதுறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டினர் ஆகஸ்ட்-1 முதல் நேரடியாக நாட்டில் நுழைய இரு தினங்களுக்கு முன்பு அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில்,வீட்டுத் தொழிலாளர்கள் தடுப்பூசி எடுக்க தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியானது. இந்நிலையில் தடுப்பூசி எடுக்காமல் குவைத் வருகின்ற வீட்டுத் தொழிலாளர்கள் 14 நாட்கள் கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) செய்ய வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா எதிர்மறை PCR சான்றிதழ் எடுத்து வரவேண்டும் மற்றும் குவைத் விமான நிலையத்தில் வைத்து இவர்களுக்கு Swab மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்படும், ஹோட்டல் தனிமைப்படுத்தல் உட்பட மேற்குறிப்பிட்ட அனைத்திற்குமான செலவை Sponsore ஏற்க வேண்டும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.