குவைத்தில் இரண்டாவது டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மாற்றுவழியாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் அமைச்சர் தகவல்
Image : Health Minister
குவைத்தில் இரண்டாவது டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மாற்றுவழி செய்யப்படும்
குவைத்தில் இரண்டாவது டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நபர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பசில் அல் சபா தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பற்றாக்குறை குவைத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளைகுடா நாடும் எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரியில், அஸ்டாஜெனெகா தடுப்பூசியின் 300,000 க்கும் அதிகமான டோஸ் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
மேலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தடுப்பூசியும் முதல் டோஸுக்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால் அடுத்தடுத்து இறக்குமதி செய்ய தீர்மானித்த திட்டங்கள் தடைபட்டன. இதன் காரணமாக, தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்த மாதம் 8-ஆம் தேதி, அதாவது நாளை சோதனை முடிவுகளைப் பெற்ற பிறகு இரண்டாவது டோஸை பயனாளர்களுக்கு விநியோகிக்க சுகாதரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அமைச்சரின் அறிக்கை இது தொடர்பாக மேலும் பின்னடைவுகள் ஏற்படக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும் என்று தெரிகிறது.