BREAKING NEWS
latest

Thursday, June 3, 2021

குவைத் இந்திய தூதர்,நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்

குவைத் இந்திய தூதக தூதர் அவர்கள்,குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்

Image : இந்திய தூதர்

குவைத் இந்திய தூதர்,நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்

குவைத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில்(இந்தியாவில்) சிக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் குவைத்திலுள்ள இந்திய வெளிநாட்டவர்கள் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து,குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள்,குவைத் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சாமித் அப்துல் அஜீஸ் அல் ஹமத்துடன் நடந்த உரையாடலின் பொது விவாதித்தார்.

அப்போது இந்தியர்களுக்கு நாட்டில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் நடைமுறையில் உள்ளது எனவும், தற்போது குவைத் சுகாதரத்துறை நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது எனவும், இந்தியாவில் சிக்கியுள்ள பெரும்பான்மையான வெளிநாட்டினர் கோவாசின் மற்றும் கோவிஷீல்ட் ஆகியவற்றை எடுத்து வருகின்றனர் எனவும்,ஆன்லைன் வழியாக நடைபெற்ற கலந்துரையாடலில் தூதர் சுட்டிக்காட்டினார் மற்றும் குவைத்தில் உள்ள இந்திய பொறியியலாளர்கள்(Engineers) தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் தூதர் விவாதித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Add your comments to குவைத் இந்திய தூதர்,நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்

« PREV
NEXT »