இந்தியா சார்பில் கடந்த வியாழக்கிழமை குவைத்தில் வைத்து கையெழுத்திட்ட வீட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தின் நன்மைகள் பற்றி தூதர் சி.பி. ஜார்ஜ் அவர்கள் விவரித்தார்
Image : குவைத் இந்திய தூதர்
இந்தியா சார்பில் கடந்த வியாழக்கிழமை குவைத்தில் வைத்து கையெழுத்திட்ட வீட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தின் நன்மைகள்
இந்தியா சார்பில் கடந்த வியாழக்கிழமை குவைத்தில் வைத்து கையெழுத்திட்ட வீட்டுத் தொழிலாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமான பல நன்மையான விதிமுறைகள் இடம்பெறுகின்றன என்று நேற்று(15/06/21) இந்திய தூதரகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்தியா-குவைத் இராஜந்திர உறவுகளின் 60-வது ஆண்டு நிறைவின் நேரத்தில் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமான நடவடிக்கை என்று தூதர் சி.பி. ஜார்ஜ் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை விவரித்தார்.
வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான ஒரு நேரடி ஒப்பந்தமாகும். வீட்டுத் தொழிலாளர்களுக்கான இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, வீட்டு தொழிலாளர்கள் இனிமுதல் குவைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருவார்கள். தொழிலாளியின் சம்பளத்தை வழங்க ஸ்பான்சர் தொழிலாளர் பெயரில் ஒரு வங்கி கணக்கு திறக்க வேண்டும் மற்றும் சம்பளம் ஒவ்வொரு மாதமும் தொழிலாளியின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். தொழிலாளியின் பாஸ்போர்ட்டை ஸ்பான்சர் கையில் வைத்திருக்க கூடாது.
மேலும் தொழிலாளிக்கு சிறப்புப் சுகாதார மற்றும் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்குவதற்கான பொறுப்பை ஸ்பான்சர் ஏற்க வேண்டும். ஆட்சேர்ப்பு(அழைத்து வருகின்ற செலவு) செலவுகள் என்ற பெயரில் பணியாளரின் சம்பளத்திலிருந்து செலவு செய்த பணத்தை குறைக்கவோ அல்லது பிடிக்கவோ ஏஜென்சிக்கும் உரிமை இருக்காது. அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்ட உதவி இலவசமாக வழங்கபடும். வீட்டுத் தொழிலாளர்களைச் சுரண்டும் முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதர் எச்சரித்தார். இது தொடர்பாக குவைத் அரசும், இந்திய அரசும் சிறப்பு மேற்பார்வை செய்யும். இந்தியாவில் உள்ள குடிவரவு அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கடிதம் எழுதியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குவைத்தில் 3,43,335 இந்திய வீட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் 29 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். தற்போது இந்திய தூதரகத்தின் கீழ் 2 தங்கும் விடுதிகள்(shelter) உள்ளன. இப்போது இந்த தங்கும் விடுதிகள் ஜநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன என்றும், பணியிடத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தங்குமிடங்களுக்கு வர தயங்கக்கூடாது என்பதையும் தூதர் நினைவுபடுத்தினார்.