குவைத்தில் மசூதியை மறைவிடமாக கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்த வெளிநாட்டவரை இரகசிய பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்
குவைத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்
குவைத்தில் உள்ள மசூதி ஒன்றில் வேலை செய்துக் கொண்டு,அதை மறைவிடமாக பயன்படுத்தி போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,இந்த சம்பவம் ஜாபர் அல் அகமது பகுதியில் நடந்துள்ளது. அவர் அங்குள்ள குறிபிட்ட மசூதியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
அவர் மசூதி ஊழியர் என்பதால் அவரை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் இதை செய்துவந்துள்ளார். ரகசிய தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியை சி.ஐ.டி. அதிகாரிகள் கண்காணித்து வந்தநிலையில் ஆதாரத்துடன் கைது செய்தனர். போதைப்பொருட்களின் விற்பனைகளை மசூதியின் நுழைவாயிலில் வைத்து நடத்தினார். இவர் கைது செய்த பின்னர், தங்கியிருந்த அறையினை சோதனை செய்ததில் 1.5 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.