இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது
Image : பஹ்ரைன் விமான நிலையம்
இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது
இந்தியர்களுக்கு புதிய பணி விசாக்களை(New Work Visa) வழங்குவதை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய விசா தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா உட்பட ஆறு நாடுகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. Labor Market Regulatory Authority இந்த புதிய நடவடிக்கை தொடர்பான செய்தியை இன்று(13/06/21) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவை தவிர இலங்கை,பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் புதிய வேலை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் ரெட் லிஸ்டில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாடுகளில் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரே புதிய விசா வழங்கல் மீண்டும் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் தற்போதைய சூழ்நிலையில் பஹ்ரைன் நாட்டின் புதிய வேலை விசாவுக்காக பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வு செய்யவும்.