BREAKING NEWS
latest

Friday, June 11, 2021

ஓமானில் தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் பிரார்த்தனைக்காக நாளை முதல் திறக்கப்படுகின்றன

ஓமானில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் பிரார்த்தனைக்காக நாளை முதல் திறக்கப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image: மஸ்கட் சிவன் கோயில்

ஓமானில் தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் பிரார்த்தனைக்காக நாளை முதல் திறக்கப்படுகின்றன

ஓமானில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் பின்பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களும், கோயில்களும் மீண்டும் திறக்கப்படுகின்றன. கோவிட் பரவல் அதிகரித்த நிலையில் கடந்த ஏப்ரல்-3,2021 முதல் தற்காலிகமாக பிரார்த்தனைக்காக மூடப்பட்டிருந்த கோவில்கள் மற்றும் தேவாலயங்களே விசுவாசிகள் பிரார்த்தனை செய்வதற்காக மீண்டும் திறக்கப்படுகின்றன. டர்செட்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோயில் மற்றும் மஸ்கட்டில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில் ஆகியவை ஜூன்-12 நாளை சனிக்கிழமையன்று வழிபாட்டுக்காக திறக்கப்படும்.

பூஜை சனிக்கிழமை காலை 06:30 மணிக்கு தர்சைட் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் தொடங்கும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலில் பூஜைகள் தொடங்கும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன்-13 ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமானில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பிரார்த்தனை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல் 12-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 65-வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் தேவாலயங்களில் நுழைவு அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளுடன் ருவி பீட்டர் மற்றும் பால் சர்ச் தேவாலயங்கள் வழிபாட்டிற்காக தயாராகி வருகின்றன என்று விசுவாசிகளுக்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேவாலயங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகமூடி அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Add your comments to ஓமானில் தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் மீண்டும் பிரார்த்தனைக்காக நாளை முதல் திறக்கப்படுகின்றன

« PREV
NEXT »