குவைத்தில் வெளிநாட்டினர் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக குடிமக்கள் மற்றும் மனித உரிமை அமைப்பு உள்ளிட்டவை எதிர்ப்பை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது
Image : Kuwait Airport
குவைத்தில் வெளிநாட்டினர் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக குடிமக்கள் மற்றும் மனித உரிமை அமைப்பு எதிர்ப்பை தெரிவித்துள்ளது
குவைத்தில் வெளிநாட்டினர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு குடிமக்களுக்கு இடையிலேயே தற்போது கடுமையான எதிர்ப்பு பரவலாக கிளம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக,இந்த தடைக்கு எதிராக குவைத் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது மனித உரிமை அமைப்புகளும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்வந்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் Validity குடியிருப்பு ஆவணங்கள் கைவசம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் குவைத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று குவைத் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வெளிநாட்டினருக்கான நுழைவுத் தடையை காலவரையின்றி நீட்டிப்பது அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது எனவும், இதன் விளைவாக, வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொள்கின்றனர் எனவும்,இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெளிநாட்டினர் குவைத்தில் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வரவேற்பதாகவும், அதேநேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களையும் நாட்டில் நுழைய விடாமல் விதிக்கப்பட்டுள்ள தடை தான் தங்களை ஆச்சரியப்படுத்துவதாக குவைத் மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் ஹுசைன் அல்-ஒடாய்பி கூறியுள்ளார். தடுப்பூசி போடப்பட்ட குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகள் தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், குவைத் அரசியலமைப்பு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும்,குடியிருப்பாளர்களுக்கும்(வெளிநாட்டினர்) அனுமதிக்கின்ற சமத்துவம் மற்றும் பாகுபாடற்ற கொள்கைகளுக்கு எதிரானது இது என்றும் அவர் கூறினார். தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டினரை தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் ஏற்படுத்தி அதன் அடிப்படையில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே குவைத் டிராவல் & டூரிசம் அமைப்பின் பிரதிநிதிகளும் நேற்று வெளிநாட்டினருக்கான பயண தடை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் உலகம் முழுவதும் வாசலை திறக்கும்போது,குவைத் உலகத்திற்கான கதவுகளை மூடுகிறது எனவும், வெளிநாட்டினருக்கான தடை ஆனது உலகின் பிற பகுதிகளிலிருந்து நாட்டை தனிமைப்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.