குவைத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு, மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் வெளிநாட்டினர் நுழைய தடை தொடரும் என்றே தெரிகிறது
குவைத்தில் உயரும் கொரோனா பாதிப்பு;வெளிநாட்டினர் நுழைய தடை காலவரையின்றி தொடரும் என்றே தெரிகிறது
குவைத்தில் கோவிட்டின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளிநாட்டினருக்கு நுழைவதற்கான தடை மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரை தொடர வேண்டும் என்று நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை ஆய்வுக் குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டுமே 6,130 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மரபணு மாற்றம் ஏற்பட்ட வைரஸ்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாளை கூட்டப்படவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டினர் நேரடியாக குவைத்தில் நுழைவதற்கான வாய்ப்புகளில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.