குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் தடுப்பூசி போடாமல் வரலாம் வரலாம் என்று வீட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது என்று உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது
குவைத்திற்கு வீட்டுத் தொழிலாளர்கள் தடுப்பூசி போடாமல் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் ஆகஸ்ட்-1,2021 முதல் தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்கள் நுழைய அனுமதிக்கும் முடிவிலிருந்து வீட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் எனவும்,அவர்கள் தடுப்பூசி இல்லாமல் வரலாம் என்றும் வீட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் கூட்டமைப்பு(Federation of Domestic Labor Office) தெரிவித்துள்ளது என்று உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய(17/06/21) வியாழக்கிழமை அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள் குறித்து மாலையில் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட விளக்கத்தில், குவைத் அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தொழிலாளர்கள் தடுப்பூசி எடுத்த சான்றிதழ் இல்லாமல் குவைத்தில் நுழைய முடியும் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது.
நேற்றைய அறிக்கையின் படி ஆகஸ்டு-1 முதல் நுழைய குவைத் அமைச்சரவை விதித்துள்ள விதிமுறைகள் இவைகள் ஆகும், செல்லுபடியாகும் வேலை அனுமதி பத்திரம்(Validity Work Visa) கைவசம் இருக்க வேண்டும்,குவைத் அனுமதி வழங்கியுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எடுத்திருக்க வேண்டும்,பயணத்தின் 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு எதிர்மறை(Negative) என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தாலும் குவைத்தில் வந்த பிறகு 7 நாட்கள் (ஒரு வாரத்திற்கு) வீட்டு தனிமைப்படுத்தல் செய்துக் கொள்ள வேண்டும் என்பவை ஆகும்.
குவைத் சுகாதாரதுறை அனுமதி வழங்கியுள்ள நான்கு தடுப்பூசிகள் Oxford/Astrazeneca, Pfizer, Moderna மற்றும் Johnson & Johnson ஆகியவை ஆகும். மேலும் இந்தியாவில் வழங்கப்படும் கோவ்ஷீல்ட் தடுப்பூசியே குவைத்தில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா என்ற பெயரில் வழங்கபடுகிறது என்பதால் இவை குவைத் சுகாதரத்துறையால் அங்கீகரிக்கப்படலாம், எனவே தடை நீக்கப்படும் ஆகஸ்டு-1 ற்கு முன்பு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ் பதிவு செய்ய இணையதள link-ஐ அறிமுகம் செய்தது https://vaxcert.moh.gov.kw/SPCMS/PH/CVD_19_Vaccine_External_Registration.aspx இந்த தளத்தில் சிவில் ஐடி எண் உள்ளிட்ட உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் வெளிநாடுகளில் எடுத்த தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பதிவேற்ற வேண்டும். பிறகு குவைத் சுகாதாரதுறை அமைச்சகத்தால் உங்கள் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டால் ஓரிரு தினங்களில் பதில் அனுப்புவார்கள். எதற்கும் தாயகத்தில் தடுப்பூசி எடுத்த இந்தியர்கள் இந்த தளத்தில் பதிவு செய்யுங்கள் குவைத் திருப்பும் நேரத்தில் சில நேரங்களில் இதுவும் ஒருவகையில் பயணத்திற்கு தேவையாக இருக்கலாம்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் என்னென்ன மாற்றம் செய்யப்படும் என்பது ஆகஸ்ட்-1 க்குள் தெரியவரும்.