குவைத்தில் உள்ள வீட்டுத் தொழிலாளர்கள் தாயகம் திரும்புவதற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது என்ற தகவலை குவைத் தினசரி நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது
Image : தடுப்பூசி மையத்தில் தொழிலாளர்கள்
குவைத்தில் உள்ள வீட்டுத் தொழிலாளர்கள் தாயகம் திரும்புவதற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது
குவைத்தில் தற்போது உள்ள வீட்டுப் பணியாளர்களுக்கு புதிய பயண கட்டுபாடுகள் ஏற்படுத்தப்படுகிறது. புதிய அறிவிப்பின்படி தற்போது நாட்டில் வசிக்கும் வீட்டுத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் இரண்டு டோஸ் தடுப்பூசியை முடிக்காமல் குவைத்திற்கு வெளியே பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள். முன்னதாக, இந்த கட்டுபாடு குடிமக்களுடன் நாட்டிற்கு வெளியே பயணிக்க வருகின்ற வீட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் விதத்தில் நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 1,2021 முதல், நாட்டை விட்டு வெளியேறும் அனைத்து வீட்டுத் தொழிலாளர்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக இருக்கும். இதேபோல், தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்ற நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் குவைத் திரும்புவதற்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி முடித்திருக்க வேண்டும். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக குவைத்தில் உள்ள வீட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.