இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளை சேர்ந்த Validity Work Visa உள்ளவர்கள் இன்று புதிதாக அறிவித்துள்ள விதிமுறைகள் பின்பற்றி துபாய் வருவதற்காக முதல்கட் தளர்வுகளை மாலையில் வெளியிட்டுள்ளது
Image : Dubai International Airport
இந்தியர்கள் ஜூன்-23 முதல் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள வரையறை செய்துள்ள ஆறு நிபந்தனைகள் இவைகள் ஆகும்
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான நுழைவு கட்டுப்பாடுகளை ஓரளவு குறைக்க ஐக்கிய அரபு அமீரகம் இன்று அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா உட்பட மூன்று நாடுகளில் இருந்து துபாய் திரும்புவதற்கு அனுமதிப்பதாக அறிவித்தது அதிகாரப்பூர்வ செய்தியை இன்று(19/06/21) சனிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஜூன் 23 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி தடை நீக்கப்பட்டுவதால் விமான சேவைகளை தொடங்குவது குறித்து விரைவில்அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜூன்-23,2021 முதல் இந்தியாவில் இருந்து குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் துபாய் திரும்புவதற்கான ஆறு நிபந்தனைகள்:
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகரித்த கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்திருக்க வேண்டும். தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சினோஃபார்ம், ஃபைசர், பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் அஸ்ட்ராஜெனிகா ஆகும்.
- அஸ்ட்ராஜெனிகா தான் இந்தியாலில் கோவிட்சீல்ட் என்ற பெயரில் வழங்கபடுகிறது. எனவே இந்த 2 டோஸ் எடுத்தவர்கள் துபாய்க்கு வர முடியும். மேலும் தடுப்பூசி சான்றிதழில் அஸ்ட்ராஜெனிகா/கோவிட்சீல்ட் என்ற பதிவு செய்திருக்க வேண்டும் உடன் உங்கள் பாஸ்போர்ட் எண்ணும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- எதிர்மறை பி.சி.ஆர் பரிசோதனை முடிவு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுத்திருக்க வேண்டும்.(இதில் ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களுக்கு சலுகைகள் உள்ளது)
- QR குறியீட்டைக் கொண்ட சோதனை முடிவு சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பான விரைவு பி.சி.ஆர்(rapid test) பரிசோதனை செய்த சான்றிதழ் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிறகு, பயணிகள் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
- பி.சி.ஆர் தேர்வின் முடிவுகள் கிடைக்கும் வரை நிறுவன தனிமைப்படுத்தலில் பயணி இருக்க வேண்டும். சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்று தெரிகிறது. இதிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
மேலும் அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகங்களின் மற்ற இடங்களின் விசா கைவசம் உள்ள இந்தியர்கள் திரும்புவது தொடர்பான தெளிவாக விளக்கம் எனவும் இன்றைய அறிக்கையில் இடம்பெறவில்லை. வரும் மணிநேரத்தில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த புதிய அறிவிப்பு வெளியான நிலையில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன்-23 முதல் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவை துபாயுடன் இணைக்கும் விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.