குவைத் இந்திய தூதர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்;மேலும் தூதரக சேவைகள் ஜூலை-1 வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது
Image : தூதர் சிபி ஜார்ஜ்
குவைத் இந்திய தூதர்,தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
குவைத் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்களுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று(24/06/21) வியாழக்கிழமை இரவு அவருடைய டிவிட்டர் கணக்கு வழியாக இதை வெளியிட்டார். தான் தனிமைப்படுத்தல் செய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,கடந்த 10 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் இரண்டு டோஸ் நோய்த்தடுப்பு தடுப்பூசியை முடித்துள்ளார் என்பதை, இந்திய தூதரகத்தில் வைத்து நேற்று முன்தினம் நடைபெற்ற Open House நிகழச்சியில் பேசும் போது தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற அடிப்படையில் இந்திய தூதரகத்தின் சேவைகள் அனைத்தும் ஜூலை 1 வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவசரகால உதவிக்காக சேவைகள் மற்றும் 3 பாஸ்போர்ட் மையங்களின் வழியான சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.